வியாழன், 2 ஜூலை, 2015

ஒரு வழியாக விவசாயத்தைக் கண்டு கொண்ட மோடி

ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடயம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்தையும் சேர்த்து தான் வளர்ச்சி என்று சொல்கிறார் நினைத்து இருந்தோம்.


இதனால் நாமும் கூட விவசாயம் சார்ந்த பங்குகளை கூட போர்ட்போலியோவில் பரிந்துரை செய்து இருந்தோம்.



ஆனால் கடந்த ஒரு வருடமாக அவர் விவசாயத்தை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை .

கடந்த பட்ஜெட்டில் கூட அருண் ஜெட்லி விவசாய பாசனத்திற்கான மானியத்தை உரத்துடன் சேர்த்து விட்டு விட்டார். இதனால் உண்மையான விவசாய பாசன மானியம் குறைந்து விட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அதிக மழை பெய்து பயிர்களைக் கெடுத்தது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்தது அதிக அளவில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.

இந்த ஆண்டு மழை பெய்யாமல் வறட்சி கொடுக்கும் என்று புள்ளிவிவரங்கள் சொல்லிய நிலையில் வருண பகவான் கொஞ்சம் கருணை காட்டி விட்டார்.

இது வரை இந்தியாவில் 40%க்கும் குறைவான நிலங்களே சொட்டு நீர் பாசன வசதி பெற்றுள்ளன. சொட்டு நீர் பாசன வசதி பெறும் போது குறைந்த நீரிலும் பயிர்களை வளர்க்க முடியும், அதே நேரத்தில் அதிக அளவு தண்ணீரும் வீணாகாது.

அப்படியொரு வசதி வரும் போது தற்போது சொல்லப்பட்ட வறட்சியை எல்லாம் எளிதில் சமாளித்து விட முடியும்.

இந்த நிலையில் அரசு ஒரு மெகா விவசாய பாசன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50,000 கோடி அளவு இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிதி ஆண்டில் 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த நிதி பாசன துறையில் தண்ணீரை சேமிக்க பயன்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் உதவும் என்று தெரிகிறது.

இந்த அறிவிப்பு வந்த உடனே பாசன துறையில் இருக்கும் ஜெயின், சக்தி பம்புகள், பினோலெக்ஸ் போன்ற நிறுவனங்கள் சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டன.

எமது போர்ட்போலியோவை பெற்றவர்களும் இந்த பங்கில் ஒன்றை வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறோம். அவர்களது பொறுமைக்கு இனி அதிக அளவில் பலன் கிடைக்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக