வியாழன், 16 ஜூலை, 2015

ஜூலையில் மழை அளவு குறைந்தது

இந்த வருடம் பருவமழை குறைவாக இருக்கும் என்று தான் பரவலாக அறியப்பட்டது.


ஆனால் கடந்த ஜூன் மாதம் இறுதி வரை மழை அளவில் பெரிதளவு பாதிப்பு இல்லாததால் தப்பி விடும் என்று சந்தையும் நினைத்தது. அதனால் சில நேர்மறை விளைவுகளை காட்டியது.



இதனால் ரிசர்வ் வங்கி கூட அடுத்தக் கூட்டத்தில் வட்டி விகிதைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை பெய்த மழை அவ்வளவு சாதகமாக இல்லை.

வழக்கமான மழை பொழிவை விட 32% குறைவாக மழை பெய்துள்ளது.

மத்திய இந்தியாவில் 50% க்கும் குறைவாக மழை பெய்துள்ளது.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியும் 40%க்கும் குறைவாக மழையை பெற்றுள்ளது.

இது உண்மையில் சந்தைக்கு ஒரு எதிர்மறை காரணியாக தான் அறியப்படும்.

இதனால் பணவீக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பது சந்தேகமே.

இதே விகிதத்தில் மழைக் குறைவு தொடர்ந்தால் அடுத்த சில நாட்களுக்கு சந்தை எதிர்மறை விளைவுகளை காட்டும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும் நீண்ட கால முதலீடாக இந்த வாய்ப்புகளை சந்தையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக