சீனா, கிரீஸ் என்று ஆடிக் கொண்டிருந்த உலகக் காரணிகள் எல்லாம் தற்போது அமைதியாகி உள்ளன.
இந்த சமயத்தில் சீனாவின் வீழ்ச்சி இந்தியாவிற்கு எழுச்சி என்று தான் இந்திய சந்தை கருதிக் கொண்டு உயர்ந்து சென்றது.
கிரீஸை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
தற்போது இந்திய சந்தை 28,500 புள்ளிகளுக்கு அருகில் வந்து மேலே செல்லலாமா வேண்டாமா என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் சமயம்.
இனி உலகத்தை பார்க்கதை விட உள்ளூரை கொஞ்சம் கவனிக்கலாம்.
ஜூலை பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லை. அடுத்த ஒரு மாதம் பெய்யும் மழை இந்த பருவ விவசாயத்தை தீர்மானிக்கும் முக்கிய நேரமாக இருக்கும்.
இப்படி மழை தொடர்பாக முழுமையான திருப்தி வராத சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புகள் குறைவே.
அடுத்து ஜூன் காலாண்டு நிதி அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதில் ஐடி நிறுவனங்கள் கொஞ்சம் பட்டும் படாமல் தான் செல்கின்றன.
இந்த முறை முக்கியமாக கவனிக்க இருப்பது வங்கி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தான். இவைகள் தாம் அடுத்த வருடங்களுக்கான வளர்ச்சியை ஆரம்பித்து வைக்கும் துறைகளாக இருக்கலாம்.
இவற்றில் ஏற்படும் சிறு வளர்ச்சி கூட முக்கியத்துவம் வாய்ந்தது.
மதிப்பீடல் முறையில் பார்த்தால், சென்செக்ஸ் மலிவாக இல்லை. இப்படிப்பட்ட சிறிய சிறிய எதிர்மறை காரணிகளால் சந்தை 27,500 வரை கீழே செல்லும் அளவு அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதனால் கீழே வரும் போது வாங்கி போடுங்கள்!
இந்த முறை பங்குகளை வாங்கும் போது பங்கு மலிவாக இருக்கிறதா? நிதி அறிக்கை சாதகமாக இருக்கிறதா? என்ற இரண்டையும் கவனித்து வாங்கி போடலாம்.
ஜூலை 18 போர்ட்போலியோவிற்கு அதிக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி! பகிரப்பட்டது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக