பொதுவாக ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் முடிவுகள் அதிகம் எதிர்பார்க்கப்படும்.
மற்ற ஐடி நிறுவனங்களின் முடிவுகள் இதனோடு ஒத்த வகையிலே பெரும்பாலும் அமைந்து வருவதால் இந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த நான்கு காலாண்டுகளாக சந்தையில் டிசிஎஸ் முடிவுகள் ஏமாற்றத்தையே அளித்து வந்தன.
இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட அவர்களது நிதி முடிவுகள் எதிர்பார்ப்புகளுடன் ஓரளவு ஒன்றி போய் இருந்தது.
டாலர் வருமானம் 3.5% சதவீதம் அதிகரித்து இருந்தது. ரூபாய் வருமானத்தில் பார்த்தால், நாணய வீழ்ச்சி காரணமாக 6% அதிகமாக இருந்தது.
அதே வேளையில் நிகர லாபம் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற காரணங்களால் கடந்த காலாண்டை விட 3% குறைந்துள்ளது.
ஆனால் சந்தை இதை விட லாபம் குறையும் என்று எதிர்பாத்து இருந்தார்கள். அவ்வாறு நடக்காததால் வீழ்ச்சியிலும் ஒரு சந்தோசம் தான்.
பூலோக அடிப்படையில் பார்த்தால், வட அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சந்தைகள் நல்ல வளர்ச்சி கொடுத்து உள்ளன. இலத்தீன் அமெரிக்கா, ஜப்பான், இந்திய சந்தைகள் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை.
பணியாளர் பயன்படுத்தல் விகிதம் நன்கு உயர்ந்துள்ளது. அதே வேளையில் பணியாளர் விலகல் சதவீதம் அதிகரித்துள்ளது கவலையானது.
புதிதாக பத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்களை பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் மோசமில்லாத நிதி அறிக்கை என்று சொல்லலாம். இதனால் அடுத்த மூன்று மாதங்களில் இந்த பங்கு 2500 என்ற நிலையில் இருந்து மேலும் 10% உயர வாய்ப்புள்ளது.
ஒன்று மட்டும் புரிகிறது. மென்பொருள் நிறுவனங்கள் இனி ஓஹோவென்ற நிதி அறிக்கைகளை கொடுப்பது கடினம் என்று தெரிகிறது.
அதனால் நீண்ட கால நோக்கில் ஐடி நிறுவனங்களில் முதலீடு சதவீதங்களைக் குறைப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக