நமது தளம் பொருளாதாரம் சார்ந்ததாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்காக இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.
ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. இதை நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம்.
குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்துறோம். ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலட்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. www.tgte-icc.org
அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள், இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். எனவே தயவு செய்து பகிருங்கள் என்று உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது ஒரு வருத்தமான செயலே.
பல ஐரோப்பிய நாடுகள் இலங்கை தமிழர்களுக்காக ஐநாவில் குரல் கொடுக்கும் போது இந்தியா வெளிப்படையாகவே இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து வருகிறது. அதனால் இனியும் இந்திய அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
ஆனால் நமக்கு இருக்கும் பலமே உலகம் முழுவதும் இருக்கும் 10 கோடி தமிழ் மக்கள் தான். அதில் பத்து லட்ச வாக்குகள் மட்டும் தான் இப்பொழுது தேவைப்படுகிறது.
ஆனால் அதை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு இந்த வாக்கெடுப்பு தகவலை முறையாக தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த முடியவில்லை என்பது தான் காரணமாக இருக்கும்.
கீழே முகநூல் மூலம் கிடைத்த தகவலை அப்படியே பகிர்கிறோம். நண்பர்கள் தங்கள் வாக்குகளை இணையம் வழியே செலுத்தி கோரிக்கையை ஐநா சபைக்கு எடுத்து செல்லும் அமைப்பிற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
***
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது முகப்புத்தக பக்கத்தில் ஒரு பதிவை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள் இதோ "ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்தியை இங்க பதிவு செய்கிறேன். ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது.
ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. இதை நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம்.
குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்துறோம். ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலட்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. www.tgte-icc.org
அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள், இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். எனவே தயவு செய்து பகிருங்கள் என்று உள்ளது.
***
ஐநா சபை ஒன்றும் இந்திய அரசை போல் கோரிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்காத அமைப்பு அல்ல. இதற்கு முன்னர் கொரியாவில் இதே பிரச்சினைக்காக பான்-கி-மூன் அவர்களிடம் கோரிக்கை கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது கொடுக்கும் கோரிக்கைக்கு விளக்கமாக பதில் அளித்து இருந்தார்கள். அது அவர்கள் கடமையும் கூட..
அதனால் முடிந்த வரை சிறு சிறு துளிகளாக அழுத்தம் கொடுத்து இலங்கை தமிழ் உறவுகளுக்கு உதவுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக