வியாழன், 2 ஜூலை, 2015

மீட்சியில் இந்திய பொருளாதாரம், ராஜன் பேட்டி தரும் முக்கிய குறிப்புகள்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் முன்னால் இருந்தவர்களை விட அதிகம் வெளிப்படையானவர் என்றே சொல்லலாம்.


மோடியின் அரசு அசுர பலத்தில் இருக்கும் போது அவரது அடி நாத கொள்கையான Make In Indiaவை பற்றி  விமர்சிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக துணிச்சல் வேண்டும்.அதே போல் அவ்வப்போது உலக மத்திய வங்கிகளின் பொருளாதார கொள்கைகளையும் விமர்சிக்காமல் இல்லை. இப்படியே போனால் மீண்டும் கடுமையான பொருளாதார தேக்கங்கள் உலக அளவில் வரும் என்பதையும் எச்சரிக்கையாக சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று கொடுத்த பேட்டி இந்திய முதலீட்டாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே நேரத்தில் நம்பிக்கையைத் தரும்.

கண்டிப்பாக பேட்டிக்காக மட்டும் அரசியல் வாதிகள் சொல்லும் இனிப்பு வார்த்தைகள் போல் இது இருக்காது என்று நம்பலாம்.

இந்த பேட்டியில் நமக்கு கிடைக்கும் பயன் தரும் முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.
  • தற்போது வரை பருவமழை நன்றாக பெய்துள்ளது. கடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் தான் வட்டி குறைப்பு பற்றி சொல்லும் வேளையில் பருவமழை குறையலாம் என்பது கவலையை தருகிறது என்று சொல்லி இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.    
  • இந்திய பொருளாதாரம் மீட்சி பாதையில் திரும்ப ஆரம்பித்துள்ளது. அதிக அளவில் முதலீடுகள் வருகின்றன. வளர்ச்சி என்பது வேகமாக கூட நடக்கலாம்.
  • அரசு நிற்க வைக்கப்பட்ட ப்ரோஜெக்ட்களை மீண்டும் செயல்படுத்த நல்ல முயற்சி எடுத்துள்ளது. இதே அளவு முயற்சி இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
  • வங்கிகளின் வாராக்கடன்கள் இன்னும் தொடர்ந்து வரும் பிரச்சினை. இதற்கு வங்கிகள் தான் பிரச்சினைகளை முதலில் கண்டுபிடித்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் பெரிய அளவில் கட்டமைப்பு ப்ரோஜெக்ட்களை கொண்டு வர வேண்டும்.
  • கிரீஸ் பொருளாதார சீர்குலைவு என்பது இந்தியாவை மிக மிக குறைந்த அளவிலே பாதிக்கும்.

மொத்தத்தில் இந்த குறிப்புகளை பார்த்தால் வங்கி கடன்கள் தவிர மற்ற எல்லா பிரச்சினைகளும் தற்போதைக்கு சாதமாகவே உள்ளன. இன்னும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யவிருக்கும் மழையும் முக்கிய பங்கு வகிக்கும்.

இதனால் நீண்ட கால நோக்கில் இந்திய சந்தை என்பது நமக்கு அதிக அளவில் பயன் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்து, கீழே உள்ள பேட்டியை பாருங்கள்.

தற்போது அமெரிக்க பொருளாதாரம் உலகின் பொருளாதரத்தில் அதிக அளவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எப்பொழுது இந்திய பொருளாதாரம் மற்ற பொருளாதரங்களை பாதிக்கும்? என்று ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் கேட்கிறான்.

அதற்கு அவர் கூறும் பதிலை பார்த்தால் அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் தவிர்த்து உலகின் முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நாமும் ரசிகராகி விடலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்:
ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக