செவ்வாய், 14 ஜூலை, 2015

ULIP முதலீடுகள் ரிடர்ன் அதிக வீழ்ச்சியடைய வாய்ப்பு

நமது ஊரில் இன்சுரன்ஸிற்கும் முதலீட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லாததால் வந்த ஒரு வித்தியாசமான பண்ட் தான் ULIP.


இதைப் போல் ஒரு மோசமான முதலீடு திட்டம் எந்த நாட்டிலும் இருக்காது.



உறவுக்கார ஏஜெண்ட் ஒருவர் தொல்லையால் ULIPல் முதலீடு செய்து ஒரு மோசமான அனுபவத்தை பெற்று இருந்தோம்.

அந்த அனுபவத்தால் ஏற்கனவே ஒரு எதிர்மறை விமர்சனம் கொடுத்து இருந்தோம்.


பார்க்க:
ULIPல் முதலீடு செய்யலாமா?

இந்த ULIP ஒரு பக்கம் பார்த்தால் இன்சுரன்ஸ் போலவும் இருக்கும், இன்னொரு பக்கம் பிக்ஸ்ட் டெபாசிட் போல் மோசமான ரிடர்ன் கொடுக்கும்,

இறுதியாக பார்த்தால் ம்யூச்சல் பண்ட் போலவும் இருக்கும். ஆனால் ம்யூச்சல் பண்ட் போல எந்த பங்குகளில் முதலீடு செய்து உள்ளார்கள் என்று வெளிப்படையாகவும் பார்க்க முடியாது.

இப்படி ஒரு அடித்துப் போட்ட கலவையாக இருப்பதால் அவர்களுக்கும் நிர்வாகம் செய்ய கஷ்டம் என்று சொல்லி பல கட்டணங்களை வசூலித்து விடுவார்கள்.

கடைசியில் பார்த்தால் பிக்ஸ்ட் டெபாசிட் கூட இதை விட நல்ல ரிடர்ன் கொடுத்து இருக்கும்.

இந்த நிலையில் தற்போது அரசு இன்னொரு நிபந்தனை ULIP நிறுவனங்களுக்கு விதித்து உள்ளது.

அதாவது ULIP  நிதிகள் அனைத்தும்  25% முதலீடுகளை அரசு பத்திரங்களில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும்.

அரசு பத்திரங்கள் என்றால் பிக்ஸ்ட் டெபாசிட் அளவு தான் வருமானம் கிடைக்கும்.

ULIP என்ற ஒரு இடைத்தர் மூலமாக போய் அரசு பத்திரங்கள் வாங்குவதற்கு நாமே நேரில் வாங்கி கொள்ளலாம்.

இதனால் ஏற்கனவே கிடைத்த கொசுறு ரிடர்னும் இனி குறைய வாய்ப்பு உள்ளது.

சில சமயங்களில் இதனை வாங்காதீர்கள் என்று சொல்லும் போது ஒரு பத்து சதவீதமாவது குழம்பி போய் சொல்வதுண்டு.

ஆனால் ULIPக்கு மட்டும் நூறு சதவீதம் வாங்காதீர்கள் என்று பரிந்துரை செய்கிறோம்.

அதற்கு பதிலாக ஏதாவது ம்யூச்சல் பண்ட் ஒன்றில் முதலீடு செய்யுங்கள்!

அல்லது இன்சுரன்ஸ் என்று வேண்டும் என்றால் LICயில் ஏதாவது திட்டத்தில் சேருங்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக