வியாழன், 23 ஜூலை, 2015

SYNGENE IPOவை வாங்கலாமா?

கடைசியாக ஏப்ரல் மாதத்தில் தான் VRL IPOவைத் தான் பரிந்துரை செய்து இருந்தோம். அதுவும் 40% அளவு லாபம் கொடுத்து இருந்தது.

பார்க்க: VRL Logistics IPOவை வாங்கலாமா?


அதன் பிறகு அவ்வளவு நல்ல IPOக்கள் வராததால் பரிந்துரை செய்ய முடியவில்லை.

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு.



பயோகான் நிறுவனத்தின் துணை நிறுவனமான SYNGENE பங்குச்சந்தைக்குள் வருகிறது.

1993ல் ஆரம்பிக்கப்பட்ட SYNGENE நிறுவனம் மருந்து நிறுவனங்களுக்கு தேவையான ஆராய்சிகளை செய்து வருகிறது.

2500 ஆராய்ச்சியாளர்கள் பலமுடைய ஒரு நிறுவனம். மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் Ph.D படிப்பை முடித்துள்ளனர்.

பொதுவாக பிரபலமான மருந்து நிறுவனங்கள் தாமாகவே அதிக அளவு ஆராய்சிகளை மேற்கொள்வதில்லை. அதனை அவுட்சோர்சிங் செய்வதும் வழக்கமாக உள்ளது.

அத்தகைய ஆராய்ச்சி வேலைகளை செய்து கொடுப்பது தான் இந்த நிறுவனத்தின் பணி. இந்தியாவில் இந்த துறையில் இருக்கும் ஒரு சில நிறுவனங்களுள் இதுவும் ஒன்று.

இவர்களது 97% வருமானம் ஏற்றுமதி மூலமே வருகிறது.

கடந்த வருடம் வரை 100 அளவு எண்ணிக்கையிலே நுகர்வோர் நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது 200க்கும் மேற்பட்ட க்ளின்ட்களை பெற்றுள்ளது.

ஆனாலும் இது வரை 70% வருமானம் முதல் 10% க்ளின்ட்களிடமிருந்தே வருகிறது. இது ஒரு வகையாக ரிஸ்காக பார்க்கப்படுகிறது.

தற்போது தான் புதிய க்ளின்ட்கள் என்று வேகமான விரிவாக்கம் நடைபெற்று வருகிறது., அதனால் வரும் காலங்களில் வருமானம் சமநிலைப்படுத்தப்பட்டு வரும் வகையில் சூழ்நிலைகள் வரலாம்.

இவர்கள் வருமானம் சில ஆராய்ச்சிக்கென்று குறிப்பிட்ட கட்டணம் அல்லது கால அளவுக்கேற்ற கட்டணம் என்று இரண்டு முறைகளில் பெறப்படுகிறது.

IPO மூலம் பெறப்படும் பணம் விரிவாக்கங்களுக்கு பயன்படுத்தவிருக்கிறது.

கடன் பெரிதளவு இல்லை. பயோகான் என்ற பின்புல பிராண்டும் அதிக அளவு துணையாக உள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் வருடத்திற்கு வருமானம் 22% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. லாபம் 45% என்ற அளவு வளர்ந்து உள்ளது.



வரும் வருடங்களில் 20%க்கும் மேல் வளர்ச்சி கொடுக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஒரு பங்கு 240 முதல் 250 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் P/E விகிதம் 28க்கு அருகில் வருகிறது.

இதே துறையில் பங்குச்சந்தைக்குள் வரும் முதல் நிறுவனம் SYNGENE. அதனால் ஒப்பீடு செய்வது கடினம். ஆனாலும் மற்ற மருந்து நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் மலிவாக உள்ளது.

பங்குச்சந்தை பட்டியலுக்கு வரும் போது 20 முதல் 25% வரை பங்கு உயர வாய்ப்புள்ளது.

நீண்ட கால அல்லது குறுகிய கால முதலீட்டு நோக்கில் இந்த IPOவில் முதலீடு செய்யலாம்

ஜூலை 27 முதல் ஜூலை 29, 2015 வரையிலான காலத்தில் இந்த IPOவிற்கு விண்ணப்பிக்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக