வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. சிலருக்கு தான் கிடைக்கிறது. அதில் சிலர் வலிய வந்த வாய்ப்புகளை வீணாக்கி விடுகின்றனர்.
Housing.com நிறுவன தலைவர் ராகுல் யாதவிற்கு இதே போன்ற நிலையில் முக்கிய இடம் உண்டு. பல அழிச்சாட்டயங்களை பண்ணி வந்த அவர் இன்று நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐஐடி வாசற்படியை மிதித்தால் போதும் என்ற எண்ணம் உடையவர் பலர்.
நாம் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இண்டர்வியூ எடுக்க செல்லும் போது நிறுவனத்திலே சொல்லி விடுவார்கள். ஐஐடி என்றால் உடனே எடுத்து விடுக என்று. அதனால் நாம் எல்லாம் பெயருக்கு தான் இண்டர்வியூ எடுக்க வேண்டும்.
நாங்களும் ஐஐடி ஆட்களை வைத்து இருக்கிறோம் என்று வெளியே காட்டுவதற்காக நிறுவனம் செய்த ஏற்பாடு.
அப்படியே இணைந்தாலும் ஒரு வருடம் கூட இருக்க மாட்டார்கள். வெளியே சென்று விடுவார்கள். பொறியியல் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப அறிவு அதிகம் இருக்கும். ஆனால் மற்றவர்களுடன் சேர்ந்து அணி வேலை பார்ப்பது என்பது மிகவும் கடினம்.
இதற்கு மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் அணி சார்ந்த வேலைகளை ஐஐடியினர் வைத்து செய்வது என்பது கடினமே.
ஆனால் இதையும் தாண்டி ஐஐடியில் சில பண்பட்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களுக்கு மேல் உள்ள கருத்து பொருந்தாது.
அந்த வகையில் முதலில் சொன்ன பண்படாத ஒருவர் தான் ராகுல் யாதவ்.
இளம் வயதிலே இரண்டாயிரம் பணியாளர்களை வழிநடத்தும் வாய்ப்பு, கையில் மிதமிஞ்சிய காசு புழக்கம் என்று கடவுள் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்து இருந்தார். அவர் தொடங்கிய Housing நிறுவனம் அசுர வளர்ச்சியைக் கண்டு இருந்தது.
ஆனால் ஒரு மேலாண்மை திறன் இல்லாத டெக்னிகல் ஆள் நிறுவனத்தை நடத்துவது கடினம் என்பது ராகுல் யாதவ் மூலம் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாடம்.
அவர் பண்ணிய அழிச்சாட்டியங்களின் பட்டியல் இங்கே உள்ளது.
#1
கடந்த வருடத்தில் நிறுவனத்தின் முதலீட்டாளர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கோபத்தோடு இப்படி முடித்து இருந்தார்.
“Go die motherf*****”
இதன் தமிழ் அர்த்தம் சொல்வது நாகரீகமாக இருக்காது. ஆனால் கடைநிலை தொழிலாளி ஒருவர் கூட சொல்வதற்கு யோசிக்கும் வார்த்தைகள் அவை.
#2
கடந்த சில மாதங்கள் முன்பு நிறுவனத்தை விட்டு விலகுவதாக கடிதம் கொடுத்து அதற்கு சொல்லிய காரணம் இது...
"I don’t think you guys are intellectually capable enough to have any sensible discussion anymore."
பேச்சு நடத்துவதற்கு தகுதியில்லாத ஆட்கள் என்ற அர்த்தத்தில் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் நிறுவனத்தில் இவரது சார்புகள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறோம். அதனால் சமாதானம் செய்து விலகல் கடிதத்தை வாபஸ் செய்ய வைத்து விட்டனர்.
#3,
Quikr நிறுவனம் Housing நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வந்த போது, "இந்த வருடத்தில் சிறந்த நகைச்சுவை" என்று வர்ணித்தார்.
கார்பரேட் வரலாற்றை பார்த்தால் எதுவும் நிரந்தரமில்லை. பல தலைகீழ் புராண வரலாறுகள் இங்கு நிறையவே உள்ளன. Housing நிறுவனத்திற்கு Quikr நிறுவனம் கொஞ்சமும் சளைத்ததில்லை என்றே நினைக்கிறோம்.
#4
தனது பங்குகளை பணியாளர்களுக்கு தானம் செய்து விட்டு OLA CAPS நிறுவனரை பார்த்து நீங்களும் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கொடுக்கிறதும் கொடுக்காததும் அவரோட இஷ்டம். இவர் போய் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்.
#5
ஏர்போர்ட்டில் இன்போசிஸ் CEO விஷால் சிக்கா இவரிடம் அதிகம் பேச விரும்பாமல் தூங்க சென்று விட்டார். ராகுல் யாதவ் கடுப்பாகி அவர் தூங்கிறதை போட்டோ எடுத்து நெட்டில் போட்டு விட்டார்.
திருட்டுத்தனமாக எடுத்து வீடியோ எடுத்து வெளியிடுவதற்கும் இந்த நிகழ்விற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
#6, #7, #8 etc..
இன்னும் அவரது சில பொன்மொழிகள்..
"என்னிடம் விளையாடினால் உங்கள் நிறுவனத்தை காலி செய்து விடுவேன்"
"இன்னும் ஏழு நாள் தான். அதுக்குள்ளால என்ன வேணாலும் பன்ணிக்குங்க.."
"எனக்கு இன்னும் மூன்று லட்சம் மணித்துளிகள் தான் மீதி இருக்கிறது. அதில் உங்களிடம் பேசி நேரத்தை வீணாக்கவில்லை"
ஆக நல்ல தெலுங்கு படம் பார்ப்பார் போல...
Housing நிறுவனத்தில் உள்ள இரண்டாயிரம் கோடி முதலீடு என்பது மிகப்பெரிய தொகை. அதனை யாரும் எளிதில் விட்டு விட மாட்டார்கள்.
CEO என்பவர் ஒரு நிறுவனத்தின் பிராண்ட் தூதுவர் போல. அவர் மேல் விழும் ஒவ்வொரு இழுக்கும் நிறுவனத்தை சேர்ந்து பாதிக்கும். அதனால் Housing.com நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் சொன்ன, CEO என்ற தகுதி அவருக்கு இப்பொழுது இல்லை என்றே கருத வேண்டி உள்ளது.
ஓர் நிறுவன CEO என்பவர் தோணி போல் வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்க வேண்டும். பாதியில் விட்டுப் போவதும் ஒரு தோல்வி தான்.
ராகுல் யாதவிற்கு இன்னும் வயது இருக்கிறது, அதிக காலம் உள்ளது. அதனால் சுயபரிசோதனை செய்து தன்னிலை ஆளுமை திறன்களை வளர்த்து மீண்டும் ஜொலிக்க வேண்டும். திறமைகள் வீணாகக் கூடாது!

//இதற்கு மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்// உண்மை.,உண்மை...,எங்கள் ஊரிலும் இருவர் உள்ளனர். என்னைப்போல் சாதாரணவர்களிடம் சரியாக பேசமாட்டார்கள், Facebook ல் add friend கொடுத்தாலும் accept பண்ணமாட்டார்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12 மணி வரைதூங்குவார்கள், வீட்டில் பீசா, பர்கர் வேண்டும் என்பார்கள், ஆங்கிலம் தெரியாதவர்களிடம் வேண்டும் என்றே ஆங்கிலத்தில் பேசுவார்கள்..
பதிலளிநீக்குஎங்கே வேலை செய்கிறீர்கள் என்றால் IT யில் என்பார்கள், அதென்ன IT, கம்பனி என்ன என்றால் ? அதெல்லாம் உங்களுக்கு புரியாது என்பார்கள்.... !!!