புதன், 1 ஜூலை, 2015

பத்தாயிரம் கோடியை திரட்ட வரிசையில் நிற்கும் முன்னணி IPO பங்குகள்

இந்திய பங்குச்சந்தை தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.


கடந்த பல ஆண்டுகளாக மந்தமான சந்தையில் பல நிறுவனங்கள் சந்தையில் பணம் திரட்டும் முடிவை தள்ளி போட்டு இருந்தன.பொதுவாக கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் முதலாட்டாளர்கள் வாங்க விரும்ப மாட்டார்கள். அல்லது குறைந்த விலையில் தான் பங்கு மதிப்புகளை நிர்ணயிக்க முடியும்.

இதனால் பெருமளவு பணம் திரட்ட முடியாது.

ஆனால் தற்போது சந்தை சூழ்நிலைகள் மாறி வரும் சூழ்நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட பதிவு செய்து உள்ளன,

இதில் பல நிறுவனங்கள் மிக முக்கியமான பெரிய நிறுவனங்கள் என்று சொல்லலாம்.

பல நகரங்களில் Cafe Coffee Day என்ற பெயரில் காபி கபே வைத்து இருக்கும் நிறுவனம் சந்தைக்கு வருகிறது. இந்த நிறுவனம் 1500 கோடியை திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.

அடுத்து இகாமர்ஸ் நிறுவனமான Infibeam சந்தைக்குள் வருகிது. இந்திய பங்குச்சந்தைக்கு வரும் முதல் இகாமர்ஸ் நிறுவனம் Infibeam ஆகும். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் போன்ற மற்ற இகாமர்ஸ் நிறுவனங்கள் அலிபாபா போல் அமெரிக்க சந்தையில் பட்டியலிடவே விரும்புகின்றன.

முன்னணி விமான நிறுவனமான Indigoவும் ஆயிரம் கோடிக்கு மேல் சந்தையில் திரட்ட உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் மிகவும் குறைவாகவே விமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அதனால் விமான துறையில் முதலீடு செய்ய Indigo ஒரு நல்ல வாய்ப்பு.

L&T நிறுவனத்தின் மென்பொருள் நிறுவனமான  L&T infotech சந்தைக்குள் வருகிறது. L&T நிறுவனத்தின் 10% சந்தை மதிப்பு இந்த நிறுவனத்திற்கு வருவதால் குறைந்தது ஆயிரம் கோடியாவது திரட்டுவார்கள் என்று நம்பலாம்.

வட இந்தியாவில் செயல்படும் வங்கி நிறுவனமான Ratnakar Bankம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.

அடுத்து ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனமான Teamleaseம் சந்தையில் 500 கோடி அளவு நிதி திரட்ட உள்ளது.

மொத்தத்தில் 30 நிறுவனங்களும் பத்தாயிரம் கோடிக்கும் மேல் நிதி திரட்ட உள்ளது.

எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் IPOவில் மதிப்பீடல் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் பங்கு விலையை நிர்ணயிப்பதற்கு ஏற்ப வாங்குவதை முடிவெடுக்கலாம்.

இது போக, திரட்டப்படும் நிதி எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி பாதையையும் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு IPO வெளிவரும் போது தனித்தனியாக எமது பரிந்துரையை பதிவிடுகிறோம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக