வியாழன், 16 ஜூலை, 2015

இனி வாட்ஸ்ஆப்பில் பேச காசு கொடுக்க வேண்டும்?

ஏர்டெல் ஆரம்பித்து வைத்த நெட் ஜீரோ என்ற திட்டம் இணைய சமநிலை பற்றி பல விவாதங்களை தோற்றுவித்தது.

பார்க்க:
ஏர்டெல்லால் விவாதத்திற்கு வரும் இணைய சமநிலை

இதனால் இணைய சமநிலை பற்றி முடிவெடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கும்இந்த கமிட்டி ஒரு அறிக்கையை அளித்துள்ளது.

அதன்படி, இணைய சமநிலைக்கு சாதகமாக நிறைய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

அதனால் ஏர்டெல்லின் நெட் ஜீரோ திட்டம் இல்லாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் என்பவை இணையத்தை அடிப்படையாக வைத்து கால் பேசும் சேவையை அளித்து வருகின்றன. அவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த மென்பொருள்களால் டெலிகாம் நிறுவனங்கள் பாதிக்கபடுவதாகவும், அதனால் நாட்டில் டெலிகாம் கட்டமைப்பு வளர்ச்சி நாட்டில் பாதிக்கப்படலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

அதாவது இந்த மென்பொருள்கள் முறையான லைசென்ஸ் பெற வேண்டும் என்பது நிபந்தனையாக்கப்படலாம்.

டெலிகாம் பொறுத்தவரை லைசென்ஸ் என்றால் காசு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

அவர்கள் இந்த காசை அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலை வரலாம். அல்லது லைசென்ஸ் வாங்கிய டெலிகாம் நிறுவனங்களுக்கு கொடுக்க நேரிடலாம்.

அரசுக்கு காசு கொடுத்தால் வாட்ஸ்ஆப்பே நேரடியாக நம்மிடம் காசு வசூலிக்கலாம்.

டெலிகாம் நிறுவனங்களுக்கு செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டால் வாட்ஸ்ஆப் காலுக்கு அதிக டேட்டா கட்டணங்கள் வசூலிக்கும் நிலை ஏற்படலாம்.

எதுவென்றாலும் நாம் எங்காவது ஒரு இடத்தில பணம் கொடுத்து தான் ஆகணும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: