செவ்வாய், 21 ஜூலை, 2015

ஐந்து வருட குறைவு விலையில் தங்கம், வாங்கலாமா?

கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.


அதற்கு இரு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகிறது.ஒன்று, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் கூட்டலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.


அதனால் தங்கத்தில் உள்ள முதலீடுகள் டாலர் நோக்கி திருப்பப்படும் வாய்ப்பு உள்ளன.

பொதுவாகவே அமெரிக்க டாலர் மற்றும் தங்கம் என்ற இரண்டுமே எதிர்மறை தொடர்பு உடையவை. டாலர் மதிப்பு கூடும் போது தங்கம் குறைந்து விடும்.

இந்த காரணத்தால் உலக அளவில் தங்க விலை குறைந்து கொண்டே செல்கிறது.

இது போக உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கும் இரு நாடுகள் என்பது இந்தியா மற்றும் சீனாவே.

இதில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பணத் தேவையை அதிகரித்துள்ளது. அதனால் அங்குள்ள தங்க முதலீட்டாளர்கள் வேகமாக தங்கத்தை விற்று வருகின்றனர்.

இது தங்க வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது திருமண சீசன் என்பது இல்லை. அதனால் இங்கும் வாங்குபவர்கள் குறைந்து விட்டார்கள்.

இது போக, ஒரு சிலர் இன்னும் குறையலாம் என்று காத்து இருக்கின்றனர்.

இப்படி பல வித காரணங்கள் ஒன்று சேர்ந்து தங்க விலையை ஐந்து வருடம் பின்னோக்கி தள்ளி விட்டது.

தங்கம் ஒன்றும் எப்பொழுதும் உயர்ந்து கொண்டே செல்லும் உலோகம் அல்ல என்று தற்போது பலருக்கு புரிந்து இருக்கும். முக்கியமாக பெண்களுக்கு...

எப்பொழுதம் நமது மொத்த முதலீட்டில் 10% அளவாவது தங்கத்தில் வைத்து இருந்தால் முதலீடு சமநிலையில் இருக்கும்.

அதனால் இந்த விலை வீழ்ச்சியை தங்கத்தை சிறிது சிறிதாக வாங்கும் தருணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனாலும் இன்னும் தங்க விலை குறையும் என்றும், உயரலாம் என்றும் சரி சம விகிதத்திலே கருத்து நிலவுகிறது. ஆனால் பெரிதளவு குறைவுக்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

அதனால் மொத்தமாக வாங்காமல் ஒவ்வொரு கிராமாக அல்லது ஒவ்வொரு பவுனாக தங்கத்தை நாணயங்களில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

பார்க்க:
தங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக