புதன், 22 ஜூலை, 2015

வேலை தேட ஒரு அரசு இணைய தளம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மோடி அரசு தேசிய அளவில் ஒரு வேலை வாய்ப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நாலரை கோடி இளைஞர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர்.



இதில் ஏற்கனவே இரண்டு கோடி வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உதவியோடு இணைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இணைய தளத்தில் அரசு வேலை மட்டும் அல்லாமல் தனியார் வேலை விவரங்களும் பதிவு ஏற்றம் செய்யப்படும் என்பது நல்ல விடயம்..

அரசு ஒன்பது லட்சம் வேலை வாய்ப்பு விவரங்களை நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.

இந்த திட்டத்திற்காக நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் சுயதொழில் துறை சார்ந்த அமைச்சகம், தொழில் அறிவு மேம்படுத்தல் சார்ந்த அமைச்சகங்களும் இணைக்கப்பட உள்ளன. இதனால் சிறிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த தளத்திற்கான இணைய முகவரி இங்கே உள்ளது.
National Career Service Portal by India Govt



Naukri, Monster போன்ற தளங்கள் கட்டண சேவையை முன்னெடுத்தி செல்லும் சூழ்நிலையில் இந்த அரசு தளம் மக்களுக்கு பயனாக இருக்கும்.

ஆனால் அரசு தளம் என்பதால் இதே அளவு ஆர்வத்தோடு இணையதளத்தை நீண்ட நாட்கள் நல்ல முறையில் மேலாண்மை செய்வதில் தான் சிறிது சந்தேகம் உள்ளது.

ஆனாலும் முயற்சியை வரவேற்போம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக