ஞாயிறு, 12 ஜூலை, 2015

LIC வேதாந்தாவை எதிர்த்து ஓட்டளிக்கிறது

வேதாந்தா குழுமம் Cairn நிறுவனத்தை எப்படி அடிமாட்டு விலைக்கு ஆட்டையை போட நினைக்கிறது என்பதை பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருந்தோம்.


விவரங்களுக்கு இந்த பதிவுகளை பார்க்க..

தற்போது Cairn நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை LIC தந்துள்ளது.

இந்த டீல் வெற்றி பெற வேதாந்தா அல்லாத பிற மைனாரிட்டி முதலீட்டாளர்களின் மெஜாரிட்டி முதலீட்டாளர்களின் ஓட்டுக்கள் கட்டாயம் தேவை.

அதில் பெரும்பகுதியை LIC நிறுவனமும், Cairn Energy நிறுவனமும் வைத்துள்ளது.

இவர்களின் ஓட்டுக்கள் எங்கு செல்கிறதோ அங்கு தான் வெற்றி என்பது உண்மை நிலை.

இதில் LIC நிறுவனம் வேதாந்தா-Cairn டீலை எதிர்த்து ஓட்டு போட முடிவு செய்து உள்ளது.

LICயின் முதலீடு கண்காணிப்பு கமிட்டி இந்த முடிவை எடுத்துள்ளது. LICயின் தலைவர் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். ஆனால் அவர் இந்த கமிட்டியை எதிர்த்து ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று நம்பலாம்.

இதனால் தற்போதைய நிலையில் இந்த டீல் பாதி கட்ட தோல்வியில் தான் உள்ளது. 

தற்போதைய அறிவிப்பின் படி ஒரு Cairn பங்கிற்கு ஒரு வேதாந்தா பங்கும், 7.5% அதிக ப்ரீமியமும் வழங்குவதாக உள்ளது.

இது மிகக்குறைவு என்பது LICயின் கருத்து. மேலும் ப்ரீமியமும் அளவு அதிகரிக்குமாயின் அவர்கள் முடிவு மாறலாம்.

அதனால் Cairn பங்கை விற்காமல் வைத்துக் கொள்ளுங்கள்! வேறு யாரோ எடுக்கும் முடிவுகள் நமக்கு சாதகமாக கூட மாறலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக