இந்த வாரம் பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.
அதில் அறிவிக்கப்பட்ட நமக்கு பயன்படும் முக்கிய திட்டங்களுள் ஒன்று Digital Locker என்ற திட்டம்.
பொதுவாக ஒவ்வொரு அரசு அலுவலத்திலும் நமது தனிப்பட்ட ஆவணங்களான பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், வருமான வரி அட்டை, லைசென்ஸ் போன்ற ஏதாவது ஆவணங்களின் நகல்களை கேட்காமல் எந்த வேலையுமே முடிவதில்லை.
இதனால் நமக்கு எப்பொழுதும் ஆவணங்களை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மற்றொரு பக்கத்தில் அரசுக்கோ நாம் கொடுக்கும் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் சூழ்நிலை. அதற்கு பெரும் பொருட்செலவும் ஆகிறது. நேரமும் விர்ணயமாகிறது.
மோடியின் டிஜிட்டல் லாக்கர் திட்டம் இந்த பிரச்சினையை நல்ல விதத்தில் தீர்க்க உதவும்.
எப்படி என்றால்,
நம்மிடம் இருக்கும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து digitallocker.gov.in என்ற தளத்தில் ஏற்றி விடலாம். அதன் பிறகு எந்த அலுவலகத்திலும் ஆவணங்கள் கேட்கும் போது அதற்கான இணைய முகவரியை மட்டும் கொடுத்தால் போதும். காகித வடிவில் கொடுக்க தேவையில்லை. இது போக டிஜிட்டல் கையொப்பம் செய்யவும் வழி உள்ளது.
வங்கிகளில் பயன்படுத்துவது போல கிரிப்டோ தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உள்ளதால் நமது ஆவணங்களும் இங்கு பாதுகாப்பாக இருக்கும்.
இந்த தளத்தில் பதிவு செய்த பிறகு நமக்கு usenname, passoword போன்ற ரகசிய குறியீடுகள் நமக்கு வழங்கப்படும்.
அதே போல் எப்பொழுது எல்லாம் ஆவணங்களை திறந்து பார்க்கிறோமோ அப்பொழுது நமக்கு OTP என்ற ரகசிய எண் நமது மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை இணையத்தில் பதிவு செய்து மட்டுமே ஆவணங்களை திறந்து பார்க்கலாம். இதனால் மற்றவர்கள் பார்ப்பது கடினம்.
இந்த மொபைல் எண் நமது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் இந்த சேவையை பயன்படுத்த ஆதார் எண் கட்டாயம் தேவை..
கீழே எப்படி பயன்படுத்துவது என்பதன் முழுமையான பட விளக்கம் உள்ளது.
முதலில் கணக்கை திறக்க முதலில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து, ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP ரகசிய எண் கொண்ட எஸ்எம்எஸ் வரும். அந்த எண்ணெய் கீழே உள்ள பட்டியில் பதிவு செய்ய வேண்டும்.
அடுத்த பக்கம் கீழே உள்ளவாறு இருக்கும். இதில் நீங்கள் ஸ்கேன் செய்த ஆவணங்களை இணைக்க வேண்டும்.
நாம் ஏற்றும் ஆவணங்கள் 10MBக்குள் இருப்பது ஒரு முக்கியமான நிபந்தனை.
வெளியூர்களுக்கு அடிக்கடி பயணிக்கும் குடிமகன்கள் ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசு அலுவலங்களுக்கு தேவை என்றால் தபாலில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
மொத்தத்தில், இது அரசுக்கும் நமக்கும் பயனுள்ள நல்ல திட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக