செவ்வாய், 19 மே, 2015

தங்கத்திற்கு கிடைக்கும் வட்டியில் வருமான வரி இல்லை

இதற்கு முன் தங்கத்திற்கு வட்டி தரும் திட்டத்தை பற்றி எழுதி இருந்தோம். தற்போது திட்டம் செயலுக்கு வரும் வேளை வந்து விட்டது.

கீழே உள்ள கட்டுரைகளை படித்து பின் தொடர்க..


மத்திய அரசு ஒரு உத்தேச வரைவு திட்டத்தை தயாரித்துள்ளது.


இதில் தங்கத்திற்கு கிடைக்கும் வட்டியில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமான விடயம்.

குறைந்தபட்சம், 30 கிராம் தங்கத்தை யார் வேண்டுமானாலும், வங்கிகளில் டிபாசிட் செய்யலாம். அதற்காக தனி நபர்களுக்கு, கோல்ட் சேவிங்ஸ் அக்கவுன்ட் என்ற கணக்கு துவக்கப்படும்.

இதற்கான வட்டி 30 நாள் அல்லது 60 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்று தெரிகிறது.

வங்கிகள் இந்த தங்கத்தை CRR முறையில் கணக்கு காட்டுவதற்காகவும் வைத்துக் கொள்ளலாம்.  அதே போல் நகை கடைக்காரர்களுக்கும் இந்த தங்கத்தை கடன் வழங்கலாம்.  அந்த வகையில் வங்கிகளும் அதிக அளவில் பயன் பெறும்.

பார்க்க: CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

இங்கு வைக்கப்படும் தங்க நாணயங்கள் ஹால்மார்க் முத்திரைகள் பெறப்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.

தங்க நகைகளையும் உருக்கி இந்த திட்டத்தில் சேரலாம். அதற்கு அருகில் இருக்கும் ஹால்மார்க் முத்திரை தரும் BIS அலுவலங்கங்களை நாட வேண்டும்.



இந்த திட்டத்தின் இருப்பு காலம் குறைந்தது ஒரு வருடம். திருப்பி பெறும் போது மீண்டும் தங்கமாகவும் வாங்கலாம். அல்லது அன்றைய விலையில் தங்கத்திற்கான மதிப்பில் ரூபாயாகவும் வாங்கலாம்.

நமக்குள்ளே இருக்கும் தங்கம் வெளியில் புழங்குவதால் வெளிநாடுகளில் இறக்குமதி செய்வது பெரிதும் குறையும். அந்த வகையில் நாட்டின் அந்நிய செலாவணி குறைவுக்கு பெரிதும் இந்த திட்டம் உதவும்.

உதாரணத்திற்கு நமது கணக்கில் பார்த்தால்,

40 பவுன் தங்கத்தை இந்த திட்டத்தில் வைத்தால் வருடத்திற்கு 8,000 முதல் 16,000 ரூபாய் வரை  வட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வட்டிக்கு வருமான வரி விலக்கு உண்டு.

அதே நேரத்தில் பிக்ஸ்ட் டெபாசிட்டில் கொடுக்கபப்டும் வட்டிக்கு வருமான வரி உண்டு என்பதையும் கவனிக்க.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: